Advertisement

பெண்கள் பற்றி அவதூறு: பாக்யராஜ் மீது பாய்கிறது நடவடிக்கை

சினிமா வீடியோ நவம்பர் 27,2019 | 19:47 IST

Share

கருத்துக்களை பதிவு செய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், ‛‛பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டுமல்ல, அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பார்கள். ஆகவே, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். இது பெண்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு சில சம்பவங்களை சுட்டிக்காட்டி ஒட்டு மொத்த மகளிர் இனத்தையும் அவமதிக்கும் வகையில் பேசிய பாக்யராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பாக்யராஜிற்கு சிக்கல் உருவாகி உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X