Advertisement

பில்லாவா ரங்காவா? 100 நாள் சிறைவாசம்

அரசியல் நவம்பர் 27,2019 | 19:47 IST

Share

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம் கைதாகி, வியாழனுடன் 100 நாள் ஆகிறது. அவரை புதன்கிழமை ராகுலும் பிரியங்காவும் சிறையில் சந்தித்து பேசினர். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டில்லி ஐகோர்ட் ஜாமின் மறுத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் மனு செய்தார். அவரது சார்பில் வக்கீல் கபில் சிபல் வாதாடினார். ''சிதம்பரத்துக்கு எதிராக ஒரு ஆதாரம்கூட இல்லை; அவர் தப்பிச்செல்ல மாட்டார்; ஆதாரங்களை அழிக்க மாட்டார்; சாட்சிகளை கலைக்க மாட்டார்; ஆனாலும் ஐகோர்ட் ஜாமின் மறுத்துள்ளது; சிதம்பரத்துக்கு ஜாமின் கொடுத்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என, ஐகோர்ட் சொல்கிறது; அவர் என்ன பில்லாவா? ரங்காவா?'' இப்படி காரசாரமான வாதங்களை கபில்சிபல் முன்வைத்தார். சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை வியாழனன்றும் தொடர்கிறது. இதனிடையே, சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11 வரை சிபிஐ கோர்ட் நீட்டித்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X