Advertisement

உடல் உறுப்பு தானம் தமிழகம் முதலிடம்

பொது டிசம்பர் 01,2019 | 16:00 IST

Share

டெல்லியில் பத்தாவது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் தேர்வுசெய்யப்பட்டது. இதற்கான விருதை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் இணை அமைச்சர் அஷ்வினி குமார் செளபே ஆகியோர் இணைந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கினர். அதே போல் உடல் உறுப்பு தானத்தில் மிகச் சிறப்பாக செய்த்தற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமி என்பவருக்கு இறந்தவர் உடலில் இருந்து இரண்டு கைகளையும் பொருத்திய சாதனைக்காக  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரமாதேவிக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X