Advertisement

காரை தவிர்த்து மாட்டு வண்டியில் மணமக்கள் பயணம்

பொது டிசம்பர் 01,2019 | 00:00 IST

Share

கோவை, கிணத்துக்கடவு அருகே காரச்சேரியை சேர்ந்த சுகன்யாவுக்கும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த அசோக்குக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் ஞாயிறன்று திருமணம் நடந்தது. திருமணம் நிகழ்ச்சி முடிந்து, புதுமணதம்பதிகள் மணப்பெண் வீட்டுக்கு செல்ல சொகுசு கார் ஏற்படு செய்திருந்தனர். ஆனால் மணமக்களோ கார் வேண்டாம்; பழங்காலத்தை போல மாட்டு வண்டியில் செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். மணமக்களின் வித்தியாசமான விருப்பத்தை ஏற்று பெண்வீட்டாரும் இரட்டை மாட்டு வண்டி ஏற்பாடு செய்தனர். மழைசாரலில் குடைபிடித்தபடி மணமக்கள் அதில் உற்சாகமாக பயணித்தனர். இதை, வழியெங்கும் இருந்த மக்கள் ஆச்சரியத்துடனே பார்த்தனர். இந்த மாட்டு வண்டி பயணம் மணமக்களின் வாழ்க்கையில் இனி, மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணமாகவே இருக்கும்...


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X