Advertisement

தூக்கத்திலேயே பறிபோனது 17 பேரின் உயிர்

பொது டிசம்பர் 02,2019 | 18:02 IST

Share

மேட்டுப்பாளையத்தில் கனமழை பெய்தபோது, 3 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் மற்றும் பக்கத்துவீட்டு பெண் உட்பட 17 பேர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது, இவர்களது வீடுகளின் பின்புறம், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான, 15 அடி உயரம், 50 அடி நீளம் கொண்ட கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த பெரிய காம்பவுண்ட் சுவர் இடிந்து 4 வீடுகளின் மீது விழுந்து. வீடுகளும் முற்றிலும் இடிந்து காம்பவுண்ட் சுவர் கற்கள் மட்டுமே குவிந்து கிடந்தன. உறக்கத்தில் இருந்த 17 பேரும் கூச்சல் போடக்கூட வாய்ப்பில்லாமல் கட்டட இடிபாடுகளில் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதில், 12 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள், 2 பேர் சிறுவர்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X