Advertisement

மாணவிகள் சித்ரவதை; நித்யானந்தா ஆசிரமம் மூடல்

பொது டிசம்பர் 02,2019 | 18:15 IST

Share

ஆமதாபாத்தின் ஹிராபுர் பகுதியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. ஆசிரமத்தில் தங்கியிருந்த 4 மகள்களை அடைத்து வைத்து நித்யானந்தா சித்ரவதை செய்வதாக, பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டார். இதுபற்றி குஜராத் அரசு விசாரித்தபோது, டில்லி பப்ளிக் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோதமாக ஆசிரமம் செயல்பட பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியது தெரிந்தது. மோசடி ஆவணங்களை தாக்கல் செய்து அந்த பள்ளி அங்கீகாரம் பெற்றதும் அம்பலமானது. இதையடுத்து பள்ளியின் அங்கீகாரத்தை சிபிஎஸ்இ ரத்து செய்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X