பொது » 2வது நாளாக ஊட்டி ரோடு துண்டிப்பு டிசம்பர் 03,2019 11:12 IST
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 14 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், நந்தகோபால் பாலம் பகுதியில் ராட்சத பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. ஜேசிபி மூலமும், தொடர்ந்து கம்ப்ரசர் உதவியுடன் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் 2வது நாளாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழை நீடிப்பதால், மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
வாசகர் கருத்து