Advertisement

இடிந்து விழுந்த வீடுகள்: நால்வர் தப்பினர்

சம்பவம் டிசம்பர் 03,2019 | 00:00 IST

Share

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரவில் பெய்த கனமழையால், அதிகாலையில், இல்லத்தார் வடக்கு தெருவில் அடுத்தடுத்த இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. முதல் வீட்டில் இருந்த லெட்சுமணன், அவரது மகன் மாரியப்பன் இருவர் மீதும் வீட்டின் ஓடுகள் இடிந்து விழுந்ததில் காயம் பட்டனர். தாயும், மகளும் அடுத்த அறையில் உறங்கியதால் உயிர் தப்பினர். காயம்பட்ட இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அருகே இருந்த கந்தசாமி என்பவரது வீடு முழுமையாக சேதமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார், காவல்துறையினர் , வீட்டை முழுமையாக இடிக்க உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X