Advertisement

மாணவி பலாத்காரம்; முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

பொது டிசம்பர் 03,2019 | 16:17 IST

Share

கோவையில் பிளஸ்1 மாணவி நவம்பர் 26தேதி தனது பிறந்தநாளில் ஆண் நண்பருடன் பார்க்குக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர்களை வழிமறித்த 6 பேர் கும்பல், மறைவான இடத்திற்கு இழுத்து சென்று இளைஞரை தாக்கியதுடன், மாணவியை பாலியன் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மணிகண்டன் உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ராதிகா முன்னிலையில் மணிகண்டன் சரணடைந்தான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X