Advertisement

போலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு

பொது டிசம்பர் 04,2019 | 00:00 IST

Share

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை போயின. இந்த வழக்கில், திருவாரூரைச் சேர்ந்த முருகன், சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி, கணேசன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்தாண்டு, ஜனவரியில், திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 475 பவுன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளை போனதும், இந்த கும்பலால் என, போலீசார் கண்டறிந்தனர். இந்நிலையில் மேலும் 11 வழக்குகளை முருகன், சுரேஷ் ஆகியோர் மீது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் பதிந்துள்ளனர். இதற்காக, சிறையில் உள்ள சுரேஷை, குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். டிச. 16 வரை, சுரேஷை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சுரேஷ், பத்திரிகையாளர்களிடம் போலீசார் பொய் வழக்கு போட்டு, ஒரு பகுதி நகைகளை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X