Advertisement

ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா?

சினிமா வீடியோ டிசம்பர் 05,2019 | 19:50 IST

Share

ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா? ‛தர்பார்' படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இவரின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜோடியாக சீனியர் நடிகைகளை நடிக்க பேசி வருகின்றனர். கடந்தவாரம் குஷ்பு நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது மீனா நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுபற்றி ரஜினி உடன் நடிக்கிறீர்களா என மீனாவிடம் கேட்டால் மறுப்பு சொல்லாமல் அதுப்பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்கிறார். ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் ‛அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நடித்த மீனா, பிறகு ‛எஜமான், வீரா, முத்து' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து குறிப்பிடத்தக்கது. -------------------- ஐஸ்வர்யா மேனனின் 'நான் சிரித்தால்' காதலில் சொதப்புவது எப்படி படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ்படம் 2, வீரா, நேர் எதிர் படங்களில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் சரியான வாய்ப்பின்றி இருந்தார். இந்நிலையில் ஹிப் ஆப் ஆதி இசை அமைத்து நடிக்கும் 'நான் சிரித்தால்' படத்தின் நாயகியாகி இருக்கிறார். இதனை ராணா என்ற புதுமுகம் இயக்குகிறார். அவனி மூவீஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார். இந்த படம் ஐஸ்வர்யா மேனனுக்கு அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ----------------- பெரிய இயக்குனர்கள் வாய்ப்பு தரவில்லை - அக்ஷய்குமார் இந்த ஆண்டில் ரூ.1000 கோடி வசூல் செய்த நடிகர் என்ற பெருமை அக்ஷ்ய் குமாருக்கு கிடைக்க போகிறது. இவர் நடித்துள்ள ‛குட் நியூஸ்' படம் டிச.,27ல் வெளியாகும் நிலையில் அவர் அளித்த பேட்டி, வீட்டில் உட்கார்ந்து கொண்டே நாம் திறமைசாலிகள் என சொல்லிக் கொள்ள கூடாது. பெரிய வாய்ப்பு இல்லை என்றால் சின்ன படங்களில் நடிக்க வேண்டும். அப்போது தான் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும். பெரிய இயக்குனர்கள் என் படங்களை தயாரித்தார்கள், ஆனால் இயக்கவில்லை. ‛குட் நியூஸ்' இயக்குனர் ராஜ் மேத்தா எனது 21வது புதிய இயக்குனர். அனுபவம் வாய்ந்தவர்களை விட புதியவர்கள் சிறப்பாக வேலை செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாழ்வா சாவா பிரச்னை. கதை, திரைக்கதையை நம்புகிறேன். அது சிறப்பாக இருந்தால் 60% வேலை முடிந்தது. பின் இயக்குனரின் கையில் தான் படம் இருக்கிறது” என தனது சினிமா வாழ்க்கையை வெளிப்படையாக பேசினார் அக்ஷ்ய் ------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X