Advertisement

ரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு

பொது டிசம்பர் 06,2019 | 00:00 IST

Share

கரூர், வெண்ணைமலையில் சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றமதி செய்யும் இந்நிறுவனத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு உற்பத்தியை நிறுத்த தமிழ்நாடு வேளாண் இயக்குநரகம் உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிறுவனம், ஆல்ஃபா சைபர் மெத்தலின் என்ற ஆபத்தான ரசாயனம் கலந்து கொசுவலை தயாரித்து உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளது. போலியான ஆவணங்களை வழங்கி உரிமம் பெற்றது மற்றும் உரிமம் இல்லாத இடத்தில் கொசுவலை தயாரித்தது உள்ளிட்ட சட்ட விதி மீறல் காரணங்களால் தற்காலிகமாக ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தில் கடந்த மாதம் நடந்த வருமான வரித்துறை சோதனையில், சுமார் 436 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X