Advertisement

கிரிமினல்களை காட்டி கொடுக்கும் 'COPS EYE' | Madurai | Dinamalar |

சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 06,2019 | 00:00 IST

Share

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம், 'COPS EYE' எனப்படும் அதிநவீன புதிய ஆப், உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார், மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன். இந்த ஆப் மூலம், சந்தேகப்படும் நபர்களை, உடனடியாக புகைப்படம் எடுத்து, குறைந்த நேரத்தில், கிரிமினல் குற்றப்பதிவேட்டு ஆவணங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். 16 வகையான குற்றச்செயல் புரிந்த12 ஆயிரத்து 882 பேரின், பதிவேடுகள், இந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த வயதுக்குரிய போட்டோவாக இருந்தாலும், முக அடையாளத்தின் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பிற மாவட்ட போலீசாருக்கும் இந்த ஆப் மூலம் உதவி செய்யப்படுகிறது. இதுவரை, 50 கிரிமினல்களின் பழைய, புதிய போட்டோக்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இந்த ஆப்பை கண்டறிந்த ஜியோமியோ நிறுவனத்திற்கான விருது, டெல்லியில் வழங்கப்பட உள்ளது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X