Advertisement

ஆசிட் கொட்டி மாணவர்கள் காயம்; எச்.எம்., உள்ளிட்ட 2பேர் மீது வழக்கு

சம்பவம் டிசம்பர் 06,2019 | 00:00 IST

Share

துாத்துக்குடி, அருகே இடையர்காடு கிராமத்தில் நல்மேய்ப்பர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள அறிவியல் கூடத்தை சுத்தம் செய்யுமாறு ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் தலைமையாசிரியர் கூறியுள்ளார். ஆசிட் பாட்டில்களை எடுத்துச்செல்லும்போது தவறிவிழுந்து, ஆசிட் கொட்டியதில் மாணவர்கள் பிரமோத்பால், மகராஜன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, தலைமையாசிரியர் ஜெயகரன் பிரேம்குமார், அறிவியல் கூட உதவியாளர் சந்தோஷ் ரத்னகுமார் ஆகியோர் மீது ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X