Advertisement

மாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,

விளையாட்டு டிசம்பர் 06,2019 | 08:20 IST

Share

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், மாநிலத்தில் உள்ள, வேளாண் கல்லுாரிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. மண்டல அளவில் வென்ற அணிகள் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த, மாநில போட்டியில் பங்கேற்றன. வெள்ளியன்று நடந்த இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியும் கோவை வேளாண் பல்கலைக்கழகமும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, வாணவராயர் கல்லூரி, 14.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் செய்த, வேளாண் பல்கலைக்கழக அணி, 6.2 ஓவர்களில், மூன்று விக்கெட்களை இழந்து, 49 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X