Advertisement

மக்கள் நம்பிக்கை வீண் போகாது ரஜினி பேச்சு

பொது டிசம்பர் 08,2019 | 12:42 IST

Share

ரஜினிகாந்த் நடித்த ''தர்பார்'' படத்தின் இசை வெளியீட்டு விழா விழா நடந்தது. அதில் ரஜினி பேசியதாவது:  வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என்று கபாலி, காலா படங்களில் நடிக்க தொடங்கினேன். தர்பார் படம் ஸ்டைலாக இருக்கும். சந்திரமுகி படத்தை காட்டிலும் இதில் நயன்தாரா கிளாமராக இருக்கிறார்.

வரும் 12ம் தேதி 70 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ரஜினி என்று எனக்கு பெயர் வைத்தவர் பாலசந்தர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. என்னை கதாநாயகன் ஆக்கியவர் கலைஞானம். அவரது நம்பிக்கையும் வீண்போகவில்லை. அதேபோல், ரசிகர்களான நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் நிச்சயமாக வீண்போகாது. இவ்வாறு ரஜினி பேசினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X