Advertisement

தலைமை காவலருக்கு வெட்டு

சம்பவம் டிசம்பர் 08,2019 | 00:00 IST

Share

அரியலூர், மேலராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன்கள் சுதாகர், பாஸ்கர். இந்நிலையில் செப்டம்பர் மாதம் பாஸ்கர் மாமியார் மனோன்மணியை, கோவிந்தராஜ் மற்றும் சுதாகர் அடித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 நாட்கள் கழித்து வெளியே வந்த இவர்கள் இருவரும் கண்டிஷன் பெயிலில் தூத்தூர் காவல் நிலைத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில் மேலராமநல்லூரில் பாஸ்கர் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு தூத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் எழுத்தர் தலைமை காவலர் ஆனந்தன் சென்றுள்ளார். அவரை வழிமறித்த சுதாகர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X