Advertisement

இந்தியா ஏமாற்றம்

விளையாட்டு டிசம்பர் 09,2019 | 18:30 IST

Share

இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. பின் விண்டீஸ் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. ----------------------- இந்தியா சாம்பியன் தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் நடக்கிறது. இதன் பெண்கள் கால்பந்து பைனலில் இந்தியா, நேபாளத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் கபடி போட்டி பைனலில் இந்தியா, 50-13 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வென்று, தங்கம் தட்டிச் சென்றனர். ----------------------- ஷிவம் துபே நம்பிக்கை விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 3வது இடத்தில் களமிறங்கினார் ஷிவம் துபே. 30 பந்தில் 54 ரன்கள் விளாசினார். அவர் கூறுகையில்,''மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். மைதானம் பெரியதாக இருந்தாலும், என்னால் சிக்சர் அடிக்க முடியும். இதற்கான திறமை உள்ளது,'' என்றார். ----------------------- அன்கிதா அபாரம் மஹாராஷ்டிராவின் சோலாபூரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரிட்டனின் பெய்சை 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X