Advertisement

சரக்குக்கு காசு கேட்டா..? வெடிகுண்டு வீசுறாங்க....

சம்பவம் டிசம்பர் 16,2019 | 14:00 IST

Share

புதுச்சேரி திருவண்டார்கோயில் கொத்தபுரிநத்தத்தில் ரீகன் என்ற மதுபான கடை பார் உடன் அமைந்துள்ளது. ஞாயிறன்று இரவு, 3 வாலிபர்கள் மதுவருந்திவிட்டு பணம் தராமல் தகறாரு செய்துள்ளனர். மேலும் அவர்கள் காசாளரை மிரட்டி தங்களுக்கு மது மற்றும் காசு கேட்டு மிரட்ட தொடங்கினர். ஊழியர்கள் கொடுக்க மறுத்ததால் 2 பேர் தாங்கள் கொண்டுவந்த நாட்டு வெடிகுண்டுகளை அந்த பாரின் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் 2 ஊழியர்கள் காயமடைந்தனர். திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை வைத்து, சன்னியாசிக்குப்பத்தைச் சேர்ந்த,விக்னேஷ், முக்கேஷ், கதிர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X