Advertisement

டீ வேணாம் : போராட்டத்துக்கு வாங்கப்பா ! | DMK Protest | Tea Comedy | Trichy | Dinamalar

'கோக்குமாக்கு' கோவாலு டிசம்பர் 17,2019 | 00:00 IST

Share

குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் திமுக தெற்கு மாவட்ட
செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கும் என கூறப்பட்டிருந்த போதிலும், பத்து முப்பது மணி வரை கூட்டம் இல்லை. கூட்டத்திற்கு வந்த பலரும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லாமல், எதிரே இருந்த டீக்கடையில் தஞ்சம் அடைந்தனர். அங்கு வந்த நேரு, டீக்கடையில் நின்றிருந்த திமுகவினரை, கூட்டத்திற்கு வருமாறு அழைத்தார். வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன் டீ அருந்திய பின்பே ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, டீக்கடையில் நிற்பவர்களை கண்காணித்து, கூட்டத்திற்கு அனுப்புவதற்காக, நான்கு பேர் சாலையில் நிற்க வைக்கப்பட்டனர். இதனால், தொண்டர்கள் சிலர், அவசர அவசரமாக, சூடான டீயை வாயில் ஊற்றிய படியே, ஆர்ப்பாட்டத்திற்கு கிளம்பிச் சென்றனர். அதன்பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X