Advertisement

பெண்கள் வார்டில் ஆண்கள் மனுத்தாக்கல்; அதிகாரிகள் குளறுபடி

பொது டிசம்பர் 20,2019 | 00:00 IST

Share

நாமக்கல், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரப்பஞ்சோலை ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றபோது, அந்த வார்டை, பொதுவார்டு என தவறாக அச்சிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டியுள்ளனர். இதைநம்பி, 2வது வார்டு, மாவார் கிராமத்தை சேர்ந்த நடராஜன், செல்வராஜ் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகாரிகளும் மனுக்களை பெற்றுள்ளனர். வேட்புமனு பரிசீலனையிலும் அவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், இரண்டு வேட்பாளர்களும் வாக்குசேகரிக்க துவங்கியுள்ளனர். இதனிடையே 2வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், நடராஜன், செல்வராஜ் இருவரின் வேட்புமனுக்களை நிராகரித்துவிட்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ந்துபோன வேட்பாளர்கள் இருவரும் ஒன்றிய அலுவலத்திற்கு சென்று தேர்தல் அலுவலர் ஆறுமுகத்திடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X