Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 26-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு டிசம்பர் 26,2019 | 18:35 IST

Share

ஐ.எஸ்.எல்., கால்பந்து: கோல்கட்டா வெற்றி கோல்கட்டாவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோல்கட்டா, 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய கோல்கட்டா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணி சார்பில் டேவிட் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்தார். ----- லபுசேன், ஸ்மித் அரைசதம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 'பாக்சிங் டே' டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் 63, ஸ்டீவ் ஸ்மித் 77 ரன் எடுத்து கைகொடுத்தனர்., முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. ----- ஜேம்ஸ் ஆண்டர்சன் '150' தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது. இப்போட்டி இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்கும் 150வது டெஸ்ட். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 150 போட்டியில் விளையாடிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார். ----- பயஸ் ஓய்வு எப்போது இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ். கடந்த 1996ல் நடந்த அட்லான்டா ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் கைப்பற்றிய இவர், ஆண்கள் இரட்டையரில் 8, கலப்பு இரட்டையரில் 10 என மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். டேவிஸ் கோப்பை இரட்டையரில் அதிகபட்சமாக 44 வெற்றியை பதிவு செய்துள்ள இவர், அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X