Advertisement

சம்பளத்தில் முறைகேடு?: வனத்துறையில் ஆய்வு

பொது டிசம்பர் 29,2019 | 14:28 IST

Share

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக் கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப் வனச்சரகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஊதியத்தை முழுமையாக வழங்குவதில்லை என்ற புகார் எழுந்தது. அதனடிப்படையில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். வேட்டை தடுப்பு காவலர்களின் வங்கி கணக்கு விபரங்களை ஆய்வு செய்து, வங்கி கணக்கு நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து சென்றார். முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X