Advertisement

ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்பு

பொது டிசம்பர் 31,2019 | 18:30 IST

Share

இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் பதிக்காலம் செய்வாயன்று நிறைவடைந்தது . இதையடுத்து நாட்டின் 28வது புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நவரனே நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 59 . பிபின் ராவத் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். 1980ம் ஆண்டு 7வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்த முகுந்த், வடகிழக்கு மாற்றும் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவர் ராணுவ துணைத்தளபதியாக இருந்தபோது, சீனா இந்தியா எல்லையை பாதுகாக்கும் ராணுவத்திற்கு தலைமை வகித்தவர். ராணுவ பணியில் ,கடந்த 37 ஆண்டுகளாக நாட்டில் அமைதி நிலவ சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இதனிடையே, முன்னாள் தளபதி பிபின் ராவத் முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்னறு பதவி ஏற்கிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X