Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 31-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு டிசம்பர் 31,2019 | 18:30 IST

Share

டெஸ்ட் தரவரிசை: கோஹ்லி 'நம்பர்-1' டெஸ்ட் போட்டியில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பவுலர்களுக்கான தர வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புஜாரா 794 புள்ளிகளுடன் 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ----- குத்துச்சண்டை: விகாஸ் கிருஷ்ணன் தகுதி டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான 'ஆசிய-ஓசியானா' பிரிவு தகுதி சுற்று, சீனாவின் உகான் நகரில் வரும் பிப். 3-14ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, இந்திய வீரர்களுக்கான தகுதி போட்டி பெங்களூருவில் நடந்தது. இதன் 69 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், துரியோதன் சிங் நேகியை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்களான கவுரவ் சோலங்கி, நமன் தன்வர், ஆஷிஸ் குமார், சதிஷ் குமார், சச்சின் குமார் உள்ளிட்டோரும் தகுதி பெற்றனர். ----- ஏ.டி.பி., கோப்பை: நிஷிகோரி விலகல் ஆஸ்திரேலியாவில், அணிகளுக்கு இடையிலான முதலாவது ஏ.டி.பி., கோப்பை டென்னிஸ் தொடர் வரும் ஜன. 3ல் துவங்குகிறது. இத்தொடருக்கான ஜப்பான் அணியில் இருந்து முழங்கை காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட கெய் நிஷிகோரி விலகினார். இவரது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. ----- செஸ்: ஹம்பி 12வது இடம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், உலக 'ரேபிட்' மற்றும் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் 'ரேபிட்' பிரிவில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 'பிளிட்ஸ்' பிரிவு 17 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, 10.5 புள்ளிகளுடன் 12வது இடம் பிடித்தார். ரஷ்ய வீராங்கனை கடேரினா லாக்னோ 13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். -----


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X