Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 03-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 03,2020 | 19:50 IST

Share

பன்டுக்கு பார்த்திவ் 'அட்வைஸ்' இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் குறித்து, 'சீனியர்' விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கூறுகையில்,''சரியாக விளையாடவில்லை என்றால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இவை எதையும் கண்டு கொள்ள வேண்டாம், போட்டியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்,' என 'அட்வைஸ்' செய்தார். --------------------- லபுசேன் சதம் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. லபுசேன் 130 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். ---------------------- ரத்தான ரஞ்சி போட்டி ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணி முதல் மூன்று போட்டியில் 2 தோல்வி, 1 ல் 'டிரா' செய்தது. அடுத்து நான்காவது போட்டியில் உ.பி., அணிக்கு எதிராக மோதுகிறது. முதல் நாள் ஆட்டம் இன்று கான்பூரில் நடக்க இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ------------------------ பயிற்சியாளர் நம்பிக்கை இந்திய பாட்மின்டன் நட்சத்திரங்கள் குறித்து பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில்,''கடந்த சில ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டோம். இம்முறை உலக சாம்பியன் சிந்துவுடன் செல்கிறோம். இதனால் இன்னும் சிறப்பாக திறமை வெளிப்படுத்துவோம்,'' என்றார். -------------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X