Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 04-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 04,2020 | 18:35 IST

Share

லபுசேன் இரட்டை சதம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுசேன் இரட்டை சதம் அடிக்க, ஆஸ்திரேலியா 454 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்து, 391 ரன்கள் பின்தங்கி இருந்தது. .............. இந்தியா- இலங்கை முதல் மோதல் இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி அசாமின் கவுகாத்தியில் ஜனவரி 5ல் நடக்கவுள்ளது. முதுகுப்பகுதி காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, நான்கு மாதங்களுக்குப்பின் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இவரது பங்களிப்பு கிடைத்தால் இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கலாம். ............... ஓய்வு முடிவில் செத்ரி இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி. ஐ.எஸ்.எல்., தொடரில் பெங்களூரு அணி கேப்டனாக உள்ள இவர், கடந்த சீசனில் கோப்பை வென்று தந்தார். செத்ரி கூறுகையில்,'' இந்திய அணிக்காக இனிமேல் அதிக போட்டிகளில் பங்கேற்க முடியாது. இனி அணிக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் கடைசி போட்டியாக நினைத்து விளையாடப் போகிறேன்,'' என்றார். .............. பிரான்ஸ் அணி வெற்றி ஆஸ்திரேலியாவில் அணிகளுக்கு இடையில் ஏ.டி.பி., கோப்பை டென்னிஸ் தொடர் நடத்தப்படுகிறது. பிரிஸ்பேனில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ், சிலி அணிகள் மோதின. இதில் பெனாய்ட், மோன்பில்ஸ் கைகொடுக்க பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ...............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X