Advertisement

குடும்பச் சண்டை: அரசு பஸ் டிரைவர், மனைவி தற்கொலை

சம்பவம் ஜனவரி 05,2020 | 00:00 IST

Share

அரசு பஸ் டிரைவர் பெரியசாமி, அவரது மனைவி நாகலட்சுமி இருவரும், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். சிவகங்கை இளையான்குடி அருகே இடையவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நர்சிங் படிக்கும் மகளும் ப்ளஸ்2 படிக்கும் மகனும் உள்ளனர். பெரியசாமிக்கும் மனைவி நாகலட்சுமிக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.மீண்டும் சண்டை வந்ததால், நாகலட்சுமி கணவர் மற்றும் மகன் வெளியில் சென்ற நேரத்தில் தூக்கிட்டு இறந்தார் வீட்டிற்கு வந்த பெரியசாமி, நாகலெட்சுமியை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் நாகலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதனை அடுத்து பீதியடைந்த பெரியசாமி, அங்குள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X