Advertisement

ஜல்லிகட்டு காளைகளோடு தான் எங்கள் காதல் | Jallikattu | Iravathanallur | Madurai | Dinamalar |

சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 06,2020 | 00:00 IST

Share

மதுரை அனுப்பானடியை அடுத்த, ஐராவதநல்லூர் இளைஞர்களுக்கு ஜல்லிகட்டு காளைகளின் மேல் காதல் அதிகம். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஜல்லிகட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். வீட்டில் டூவீலர், காஸ்ட்லி மொபைல்போன் கேட்டு அடம்பிடிப்பதை விட, அவன் வீட்டில் காளை இருக்கு. எனக்கும் வேணும் என, பிடிவாதம் செய்து, காளைகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். ஞாயிறு என்றால் இவர்களுக்கு காளைகளுடன் ஒரே கொண்டாட்டம் தான். மண்ணை குத்தவிடுவதும், கண்மாய்க்கு அழைத்துச் சென்று நீச்சல் விடுவதுமாக, தங்களின் பொழுதுகளை, காளைகளோடு செலவிடுகின்றனர். இத்தனைக்கும் இவர்கள் டிகிரி படித்தவர்கள்… டிகிரி படித்துக் கொண்டிருப்பவர்கள் தான். அனைவரும் வாட்ஸ் குழுவின் மூலம் இணைந்துள்ளனர். எங்கே எந்த நாளில் ஜல்லிகட்டு நடக்கும் என, உடனுக்குடன் தகவல் தெரிவித்து, குழுவாக மாடுகளை அழைத்துச் செல்கின்றனர். ஒரு காலத்தில் எங்க ஐராவதநல்லுாரிலும் ஜல்லிகட்டு போட்டி நடந்தது. மறுபடியும் அதை நடத்தணும்னு ஆசையா இருக்கு. அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம் என்கின்றனர், இந்த இளைஞர்கள் ராகுல், மலைச்சாமி, அர்ஜூன் மற்றும் ராம்கி.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X