Advertisement

கிடைக்காத கடனை கட்ட சொல்லும் வங்கி: தீக்குளிக்க முயன்ற இளைஞர்

பொது ஜனவரி 07,2020 | 17:59 IST

Share

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியை சேர்ந்த விக்னேஷின் மனைவி சுஜாதாவின் இந்தியன் வங்கி கணக்கு திடீரென முடக்கப்பட்டது. போச்சம்பள்ளி வங்கி கிளையில் விசாரித்தபோது, சுஜாதா பேரில் மகளிர் குழு வங்கி கடன் பெற்றுள்ளதாகவும், குழுவின் கடன் ஐந்தரை லட்சம் ரூபாய் கட்ட வேண்டுமென கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ந்துபோன விக்னேஷ், எந்த மகளிர் குழுவிலும் இல்லை; வங்கியிலும் கடன் பெறவில்லை என கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த வங்கி மேலாளர், கடன் பெற்றதாக சில ஆவணங்களை காட்டி, பணத்தை கட்ட கூறியுள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த விக்னேஷ், வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்தனர். போலீசார் அவரை அழைத்து சென்று விசாரித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X