Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 10,2020 | 19:40 IST

Share

பெங்களூரு வெற்றி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6வது சீசன் தற்போது நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணி, ஜாம்ஷெட்பூர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெங்களூரு சார்பில் எரிக் பார்தலு, சுனில் செத்ரி தலா ஒரு கோலடித்தனர். ------------------- சிந்து தோல்வி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் டை சூ யிங் மோதினர். இதில் ஏமாற்றிய சிந்து 16-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். ------------------- இளம் இந்தியா சாம்பியன் தென் ஆப்ரிக்காவில், நான்கு நாடுகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட அணிகள் மோதிய 'யூத்' ஒருநாள் தொடர் நடந்தது. டர்பனில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 43.1 ஓவரில் 190 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 69 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா கோப்பை வென்றது. --------------------- அரையிறுதியில் ஒசாகா ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் ஒசாகா, நெதர்லாந்தின் பெர்டென்சை 6-3, 3-6, 6-3 என போராடி வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். ----------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X