Advertisement

உதவியாளரின் உடலைபார்த்து கதறி அழுத அமைச்சர்

பொது ஜனவரி 12,2020 | 00:00 IST

Share

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்த வெங்கடேஷ் கார் விபத்தில் உயிரிழந்தார். பரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெங்கடேஷ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், துக்கம் தாளாமல் கண்ணீர் வீட்டு தேம்பி அழுதார். வெங்கடேசனின் வீட்டிலேயே இருந்து இறுதி காரியங்களை அமைச்சர் செய்து வருகிறார். 8 ஆண்டுகளாக அமைச்சரின் தனிஉதவியாளராக இருந்தவர் வெங்கடேஷ். சனியன்று, புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை, திருச்சி விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு பரம்பூருக்கு திரும்பிகொண்டிருந்தபோதுதான் கார் விபத்தில் வெங்கடேஷ் உயிரிழந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X