Advertisement

காங்கிரசுக்கு கைகொடுத்த அதிமுக

அரசியல் ஜனவரி 12,2020 | 00:00 IST

Share

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே வைத்திருந்த அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து தலைவர் பதவியை கைப்பற்றியது. திமுக கூட்டணி 13 உறுப்பினர்களை கொண்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் கலைவாணி தோல்வியடைந்தார்.காங்கிரஸ் உட்பட மூன்றுபேர் அதிமுக பக்கம் சாய்ந்தனர். இதனால் , தலைவர் பதவியை அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி எளிதாக கைப்பற்றினார். துணைத்தலைவர் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிமுக போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உமாமகேஸ்வரியை அதிமுகவினர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர். இதில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தலா 11 ஓட்டுகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.இதனையடுத்து குலுக்கல் முறையில் காங்கிரஸ் வேட்பாளர் உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X