Advertisement

ஸ்ரீரங்கம் கோயிலில் வேடுபறி உற்சவம்

ஆன்மிகம் வீடியோ ஜனவரி 13,2020 | 20:00 IST

Share

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வேடுபறி உற்சவம் திங்கள் அன்று நடந்தது. திருமங்கை மன்னன் பெருமாள் மேல் கொண்டிருந்த பக்திக்காக கொள்ளையடித்தாவது திருப்பணியை நிறைவேற்றிய சம்பவத்தை நினைவு கூறும் வகையில் வேடுபறி உற்சவம் நடத்தப்படுகிறது. இதையடுத்து நம்பெருமாள் சந்தன மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மணல்வெளிப் பகுதியில் ஒரு மணி நேரம் வையாளி கண்டருளினார். பின்னர் திருமங்கை மன்னை நம்பெருமாளிடம் உள்ள பொருட்களை கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி, பின்னர் தன் தவறை உணர்ந்து சரணாகதியடையும் நிகழ்வும் நடத்திக் காட்டப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X