Advertisement

அகதிகள் திரும்ப வேண்டும் விக்னேஸ்வரன் பேட்டி

பொது ஜனவரி 14,2020 | 15:23 IST

Share

இலங்கை வடக்கு மாகாண கவுன்சிலின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் டைம்ஸ் நிருபருக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இணக்கமாக செயல்படும் என்று தோன்றவில்லை. ஏன் என்றால், இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடு என்றுதான் அவர்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார்கள். ஆகவே, அவர்களின் முன்னெடுப்பும் அந்த கொள்கையின் அடிப்படையிலேயே அமைகின்றது. ஆனாலும், தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோருடைய விருப்பமும் ஆகும். அகதிகளாக இந்தியாவில் வாழும் அநேகருக்கு இலங்கையில் வீடும் நிலபுலன்களும் இருக்கின்றன. அந்த நிலங்கள் நீண்டகால குத்தகையாக அரசாங்கம் எம்மது மக்களுக்கு வழங்கியதுதான். ஆனால், இவர்கள் இந்தியாவில் இருந்து திரும்பி வராத காரணத்தால் அவர்களின் சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தி சிங்களர்களுக்கு வழங்கி அவர்களை குடியமர்த்துகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X