Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 14,2020 | 19:00 IST

Share

ராம்குமார், அன்கிதா தோல்வி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 20ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. இதற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அர்ஜென்டினாவின் கோரியாவிடம் 6-4, 4-6, 1-6 என, வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் தகுதி போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பல்கேரியாவின் டோமோமாவிடம் 2-6, 6-7 என்ற நேர் செட்கணக்கில் வீழ்ந்தார். ஆனந்த் 'டிரா' நெதர்லாந்தில், 82வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. முதல் சுற்றை 'டிரா' செய்த ஆனந்த், 2வது சுற்றில் தோல்வியடைந்தார். மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இப்போட்டி 22வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது. மூன்று சுற்றுகளின் முடிவில் ஆனந்த் ஒரு புள்ளியுடன் 10வது இடத்தில் உள்ளார். தமிழகம்-மும்பை 'டிரா' இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் மோதின. மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் எடுத்தது. நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தமிழக அணி ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. தவான் '1000' இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மும்பை ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. இதில் ஷிகர் தவான் 25 ரன்கள் எடுத்த போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அரங்கில் 1000 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்திய வீரர் ஆனார். இதற்கு முன் சச்சின் 3,077 ரன், ரோகித் சர்மா 2,047, கோஹ்லி 1,727, தோனி 1,660 ரன்கள் எடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X