Advertisement

முட்டை மீது கோமுகாசன சாதனை

பொது ஜனவரி 19,2020 | 00:00 IST

Share

திருச்சியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளின் யோகாசன சாதனை நிகழ்வு பதஞ்சலி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. மதுரை கலாம் பாரம்பரிய ஆர்ட்ஸ் அகாடமி சேர்ந்த மாணவிகள் மகிமா மற்றும் ரேஷ்மா. இருவரும், திருச்சியில் நடந்த யோகாசன நிகழ்வில், ஒரு மணி நேரத்தில், ஏகபாத சிரசாசனத்தில் அமர்ந்தபடி, கண்ணாடியில் ஓவியம் வரைந்தனர். கோவை சாய்ராம் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 2 மாணவர்கள், முட்டை மீது கோமுகாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தபடியும், 2 மாணவர்கள் மண்பானை மீது பர்வதாசனம், பத்த பத்மாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தபடி சாதனை நிகழ்த்தினர். தொடர்ந்து 2பேர் பத்த பத்மாசனம், பிரளயாசனத்தில் அமர்ந்தும் சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை நிகழ்வானது, பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X