Advertisement

தமிழி எழுத்தில் திருக்குறள்!

பொது ஜனவரி 21,2020 | 19:33 IST

Share

கரூர், வெண்ணைமலை பரணி வித்யாலயா பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், தமிழ் மொழியின் ஆதிஎழுத்து வடிவமான பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கற்றுத்தந்து வருகிறார். திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கம், மாணவர் தொல்லியல் மன்றம், பரணி தொல்லியம் துறை மூலம் இதுவரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழி எழுதபடிக்க கற்றுக்கொடுத்துள்ளார். இதன் அடுத்த முயற்சியாக, தமிழி கற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் 28 பேர் அடங்கிய குழுவை உருவாக்கி 4 மாத காலத்தில், திருக்குறளின் 1330 குறள்களையும் தமிழி எழுத்து வடிவில் புத்தகமாக உருவாக்கியுள்ளார். தமிழியில் உருவாகியுள்ள இந்த முதல் திருக்குறள் புத்தகத்தை டெல்லியில் வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X