Advertisement

ஒரு ஃப்ளோவுல பேசிட்டாரோ?

பொது ஜனவரி 21,2020 | 21:09 IST

Share

துக்ளக் விழாவுல ஈ.வே.ரா சம்பந்தமா ரஜினிகாந்த் ஒரு தகவல சொன்னார். உடனே தி.க கொதிச்சு எழுந்திருச்சு, ரஜினி சொன்னது பொய்; அதுக்காக அவர் மன்னிப்பு கேக்கணும்..னு சொன்னாங்க. ஒருத்தர் ஐகோர்ட்ல ரஜினி மேல கேஸ் போட்ருக்கார். ரஜினி வீட்ட முற்ருகை இட போறதா ஒரு கட்சி அறிவிச்சிருக்கு. தி.க ஒண்ணு சொன்னா திமுகவால அத தட்ட முடியாது. அதனால, ரஜினிய கண்டிச்சு ஸ்டாலினும் அறிக்கை விட்டாச்சு. ஸ்டாலின் மகன்கூட ட்வீட் போட்டு ரஜினி எப்டியும் மன்னிப்பு கேட்ருவார், பாருங்களேன்..னு ஜோசியம் சொல்லிருக்கார்னா பாருங்க. மன்னிப்பு கேட்க மாட்டேன்; வருத்தம் தெரிவிக்கவும் மாட்டேன்..னு ரஜினி ஸ்ட்ராங்கா சொல்லிட்டார். நடந்தத சொன்னேன்; உண்மைய சொன்னதுக்கு போயி யார்னா ஸாரி சொல்லுவாங்களா..னு சிரிக்கிறார் ரஜினி. ரஜினி பேச்சால கொதிக்கிறவங்க.. கொதி வந்த மாதிரி துடிக்றவங்க என்ன சொல்றாங்க? ரஜினி சொன்னது பொய்னு சொல்றாங்க. ரஜினி என்ன சொன்னாரு? திக ஊர்வலத்துல ராமன், சீதையலாம் ஆடை இல்லாம படம் போட்டு செருப்பு மாலை போட்டு கொண்டு போனதா சொன்னாரு. அப்றம் என்ன சொன்னாரு? 1971 ல நடந்த அந்த ஊர்வலம் பத்தி வேற பத்திரிகை எதுவுமே செய்தி போடாம இருந்தப்ப, சோ மட்டும்தான் தைரியமா துக்ளக்ல போட்டார்..னு சொன்னார். இதுல எதுல்லாம் பொய்னு இவங்க சொல்றாங்க? கடவுள் உருவங்களை நிர்வாணமா சித்தரிச்சாங்களா, இல்லையா? ராமர் படத்த செருப்பால அடிச்சாங்களா, இல்லயா? அந்த நியூச பிரசுரிச்ச துக்ளக் பத்திரிகைய அரசு தடை செஞ்சுதா, இல்லையா? ஒவ்வொண்ணா பாக்கலாம். 1971 ஜனவரி 23 ம் தேதி சேலத்துல தி.க ஊர்வலம் நடத்துச்சு. மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த ஊர்வலம் அது. அதுல ராமர் சீதைய எல்லாம் நிர்வாணமா வரஞ்சு படங்கள் வச்சிருந்ததும், ராமர் படத்த செருப்பால அடிச்சதும் உண்மைதான்னு வீரமணி நடத்துற விடுதலை பத்திரிகையே சொல்லிருக்கு. 2010 ஜூலை 10 ம் தேதி வெளியான விடுதலை ஞாயிறுமலர்ல இந்து முன்னணியே.. ஓடாதே - நில்.. அப்டீனு தலைப்பு குடுத்து எழுதி இருக்ற கட்டுரைல இது தெளிவா இருக்கு. ஜனவரி கடைசில ஊர்வலத்துல எடுத்த போட்டோஸ் பிப்ரவரி முதல் வாரம் வெளியான துக்ளக்ல பிரசுரம் ஆச்சுது. அது சம்பந்தமான கட்டுரைக்கு ஒரு கார்ட்டூன் போட்டிருந்தாரு சோ. ராமர் சிலைய ஈ.வே.ரா செருப்பால அடிக்றத அப்போதைய சீயெம் கருணாநிதி கைதட்டி ரசிக்கிற மாதிரியும் போலீஸ் கைகட்டி வேடிக்கை பாக்ற மாதிரியும் சித்தரிச்சுது அந்த கார்ட்டூன். அந்த போட்டோக்கள வாங்கி பட விளக்கம்லாம் குடுத்து கட்டுரையோட பிரசுரிச்சு ஆல் இண்டியாவுக்கும் இந்தியாவுக்கு வெளிலயும் கொண்டு சேத்துது இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இங்கிஷ் பத்திரிகை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X