Advertisement

பெரியாருக்கு கண்டனம்: ரஜினி உருவ பொம்மை எரிப்பு: தேனியில் குழப்பம்

பொது ஜனவரி 22,2020 | 00:00 IST

Share

தேனியில் நடிகர் ரஜினி உருவ பொம்மை எரித்த, 29 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்ட நிர்வாகிகள், நடிகர் ரஜனியை கண்டிக்கிறோம் என்பதற்கு பதிலாக, "தந்தை பெரியாரை கண்டிக்கிறோம்" என, 5 முறை கோஷமிட்டதால் போலீசார் உட்பட அனைவரும் குழப்பம் அடைந்தனர். தேனியில், ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், நடிகர் ரஜினி உருவபொம்மையை எரித்த 29 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் நடந்த 'துக்ளக்' வார இதழ் விழாவில், ஈ.வெ.ராமசாமி குறித்து, நடிகர் ரஜனி பேசிய பேச்சுக்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பூதிப்புரம் ரோட்டின் முகப்பிலேயே, ரஜினி உருவ பொம்மையை பற்றவைத்து கோஷமிட்டனர். இதுதொடர்பாக, 29 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்ட நிர்வாகிகள், நடிகர் ரஜனியை கண்டிக்கிறோம் என்பதற்கு பதிலாக, "தந்தை பெரியாரை கண்டிக்கிறோம்" என, 5 முறை கோஷமிட்டதால் போலீசார் உட்பட அனைவரும் குழப்பம் அடைந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X