Advertisement

சி.ஏ.ஏ.க்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

பொது ஜனவரி 22,2020 | 19:10 IST

Share

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 143 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வு விசாரித்தது. 
அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிடுகையில், ''இந்த வழக்கில் பதிலளிக்க அரசுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் வாதிடுகையில், ''அதுவரை குடியுரிமைச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்; தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்'' என்றார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் கருத்தை கேட்காமல் குடியுரிமைச் சட்டத்துக்கு தடைவிதிக்க முடியாது'' என்றனர். மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 4 வாரங்களுக்குப் பிறகு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுக்களை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X