சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 23,2020 | 00:00 IST
'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், 'தினமலர்' மாணவர் பதிப்பு மெகா வினாடி வினா போட்டியின் இறுதிச்சுற்று, கோவை எஸ்.எஸ்.வி.எம்.,வேர்ல்டு பள்ளியில் நடந்தது. இதன் முதற்கட்ட போட்டிகள் கோவை, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 130 பள்ளிகளில் நடத்தப்பட்டது. விறுவிறுப்பாக நடந்த இறுதிச்சுற்று போட்டியில் எட்டு பள்ளிகளை சேர்ந்த 16 பேர் தகுதி பெற்றனர். 'எக்ஸ் குவிஸ் இட்' நிறுவனர் ஷ்ரவணா தீபன் போட்டியை நடத்தினார். இதில், வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் PSBB பி.எஸ்.பி.பி., மில்லேனியம் பள்ளி பிளஸ்1 மாணவர்கள் பிரணவ வர்ஷன், சக்தி எம்.நித்தின் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம், இவர்கள் இருவரும், அமெரிக்காவின், 'நாசா'வுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து