Advertisement

மூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி

அரசியல் ஜனவரி 23,2020 | 19:00 IST

Share

சென்னை தரமணியில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 68 லட்சம் சதுர அடி பரப்பளவில் டிஎல்எஃப் நிறுவனம் தொழில்நுட்பபூங்கா அமைக்கிறது. டிஎல்எப் டவுன்டவுன் என்பது திட்டத்தின் பெயர். அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். ''தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளால் அந்நிய நேரடி முதலீடுகள் உயர்ந்துள்ளது. யாதும் ஊரே திட்டத்தின் மூலம், அமெரிக்கா துபாயில் வாழும் தமிழர்கள் மூலம் 8835 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது, தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் 
செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X