Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 25,2020 | 21:10 IST

Share

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் 26ல் நடக்கவுள்ளது. லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் அசத்தினால் இந்திய அணி இரண்டாவது வெற்றி பெறலாம். .............. நடால் முன்னேற்றம் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் 'நம்பர்-1' வீரரான ஸ்பெயினின் நடால், 27வது இடத்திலுள்ள சக வீரர் பாப்லோவை சந்தித்தார். அபாரமாக செயல்பட்ட நடால் 6-1, 6-2, 6-4 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 6-7, 6-7 என ரஷ்யாவின் பவ்லிசென்கோவாவிடம் வீழ்ந்தார். ............. ராணி ராம்பால் கலக்கல் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய, நியூசிலாந்து லெவலப்மென்ட் பெண்கள் அணி மோதியது. இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் இரண்டு கோல் அடித்தார். சர்மிளா, நமிதா தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி வரை எதிரணியால் பதிலடி தர முடியவில்லை. இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ............... சரத் கமல், மணிகா ஏமாற்றம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதிச்சுற்று போர்ச்சுகலில் நடக்கிறது. சரத் கமல் அடங்கிய இந்திய ஆண்கள் அணி 'ரவுண்டு-16' சுற்றில் 1-3 என சுலோவேனியாவிடம் வீழ்ந்தது. பெண்கள் பிரிவு 'ரவுண்டு-16' சுற்றில் மணிகா பத்ரா அடங்கிய இந்திய அணி 2-3 என ருமேனியாவிடம் வீழ்ந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X