Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை

பொது ஜனவரி 28,2020 | 20:28 IST

Share

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னேற்பாடு பணிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்கிறோம். கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் பரிசோதனை செய்தோம். அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான். கொரோனா வைரசால் இந்தியர்களும் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் இந்தியர்கள் யாரும் கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம். இவ்வாறு ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X