Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 29-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 29,2020 | 18:55 IST

Share

ரோகித் '10,000' நியூசிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் போட்டியில் 65 ரன்கள் எடுத்த ரோகித், மூன்று வித கிரிக்கெட்டில் துவக்க வீரராக 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். கவாஸ்கர், சச்சின், சேவக்கிற்கு அடுத்து இந்த இலக்கை எட்டிய நான்காவது இந்திய வீரர் ஆனார் ரோகித். ----------------------- அரையிறுதியில் ஹாலெப் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் ருமேனியாவின் ஹாலெப், 6-1, 6-1 என எஸ்தோனியாவின் கொன்டாவெயிட்டை வென்றார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் முகுருஜா, 7-5, 6-3 என ரஷ்யாவின் பவ்லிசென்கோவாவை வீழ்த்தினார். ------------------------ ஹாக்கி: இந்தியா தோல்வி நியூசிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. ------------------------ பா.ஜ.,வில் செய்னா இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல். 29 வயதான இவர் 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் கைப்பற்றியுள்ளார். சர்வதேச தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை ஆன இவர், பா.ஜ.,வில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,''பிரதமர் மோடி கடின உழைப்பாளி. இது தான் கட்சியில் இணைய துாண்டுகோலாக இருந்தது,'' என்றார். ------------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X