Advertisement

கடகம்சிஏஏ ஓட்டெடுப்பு ஒத்திவைப்பு: இந்தியாவுக்கு வெற்றி

பொது ஜனவரி 30,2020 | 17:00 IST

Share

குடியுரிமை திருத்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என சொல்லி, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட்டில் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தீர்மானங்கள் மீது 30ம்தேதி ஓட்டெடுப்பு நடக்குமென அறிவிக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 'ஒரு நாட்டின் பார்லிமென்ட்டில் ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக இன்னொரு பார்லிமென்ட் தீர்மானம் நிறைவேற்றுவது சரியல்ல'' என, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட் தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு David Maria Sassoli லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் அனுப்பினார். இந்தச்சூழலில் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பை மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைக்க ஐரோப்பிய பார்லிமென்ட் முடிவெடுத்தது. இது, இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என மத்திய அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் - இந்தியா உச்சி மாநாட்டுக்காக மார்ச் 13ல் பிரதமர் மோடி பிரஸ்ஸல்ஸ் செல்கிறார். அப்போது, குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக இந்தியாவுடன் நேரடியாக கலந்துரையாட முடியும் என்பதால் ஓட்டெடுப்பை ஒத்திவைத்துள்ளதாக, ஐரோப்பிய மக்கள் கட்சி எம்.பி. Michael Gahler மைக்கேல் கேலர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X