Advertisement

லட்சம் விதைப் பந்துகளை தயாரித்து சாதனை

பொது ஜனவரி 30,2020 | 17:00 IST

Share

கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் அறக்கட்டளையுடன் இணைந்து, புங்கன், வாகை, மயில் கொன்றை, வன்னி, எத்தி, தான்றி, உள்ளிட்ட 12 வகையான விதைகளை மண் உருண்டைகளில் வைத்து விதைப் பந்துகளை தயாரித்தனர். இந்த ஒரு லட்சம் விதைப் பந்துகளை பிரம்மாண்டமாக இதய வடிவில் வைத்து மாணவிகள் அலங்கரித்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. விதைப் பந்துகளை, ஒரு மாணவிக்கு 2 பந்துகள் வீதம் அளித்து மரம் வளரும் தன்மை கொண்ட பகுதிகளில் இட முடிவு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். வருங்கால சந்ததியினர் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலும், பறவைகளின் புகலிடமாக மரங்கள் விளங்கும் வகையிலும் இந்த விதைப் பந்துகளை ஒன்றிணைந்து தயாரித்துள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X