Advertisement

தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

பொது ஜனவரி 31,2020 | 00:00 IST

Share

தஞ்சை பெரிய கோயிலில் பிப். 5 ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்தக்கோரி , ராமநாதபுரம் திருமுருகன் , தஞ்சை செந்தில்நாதன் மற்றும், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் மணியரசன் ஆகியோர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என, தமிழக அரசு சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்துசமய அறநிலையத்துறை அறிக்கை அடிப்படையில், தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, விழா நடந்து முடிந்த பிறகு, இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் 4 வாரங்களில், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X