Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 02-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 02,2020 | 18:17 IST

Share

இந்திய பெண்கள் ஏமாற்றம் ஆஸ்திரேலியா, இந்திய பெண்கள் அணிகள் மோதிய முத்தரப்பு 'டுவென்டி-20' லீக் போட்டி கான்பெராவில் நடந்தது. இந்திய அணிக்கு மந்தனா 35 ரன்கள் எடுத்து ஆறுதல் தர, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எலிசா பெர்ரி, 49 ரன்கள் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ............. சோபியா சாம்பியன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் முகுருஜா, அமெரிக்காவின் சோபியா கெனினை சந்தித்தார். அபாரமாக விளையாடிய சோபியா கெனின் 4-6, 6-2, 6-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்றார். ............... சுப்மன் கில் இரட்டை சதம் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 216, நியூசிலாந்து 'ஏ' 562 ரன்கள் எடுத்தன. நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் பிரியங்க் பன்சால், சுப்மன் கில் சிறப்பாக விளையாடினர். பிரியங்க் சதம் கடந்தார். சுப்மன் கில் இரட்டை சதம் அடித்தார். இந்திய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. ............. சென்னை அணி கலக்கல் கொச்சியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதின. இதில் சென்னை அணி 6-3 என வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் கிரிவெல்லாரோ, வால்ஸ்கிஸ், சாங்டே தலா இரண்டு கோல் அடித்தனர். கேரளா அணியின் ஒபெசே 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். ...............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X